நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் நடத்துகிறார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாக ஆளுநர் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் செய்துள்ளனர். இது ஏதோ அவசர கால நாட்களை நினைவூட்டுகிறது.

தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கல்வி மாநாட்டில் பங்கேற்க அவர்களுக்கு கல்வி சுதந்திரம் கிடையாதா?, அவர்களை தடுக்க காவல் துறையை முதலமைச்சர் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.