
தமிழ்நாட்டில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 750 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி கிலோ 2000 ரூபாய், முல்லைப் பூ 1800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் மார்கழி மாதம் விசேஷ நாள் என்பதாலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.