நாட்டில் மக்கள் தொகையில் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடியே 21 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக இருக்கிறது என ஐநா சபை, உலக வங்கி மற்றும் இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு தேசிய சராசரியை விட பீகாரில் தான் அதிக மக்கள் தொகை இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மக்கள் தொகை சரிவடைந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9,45,701 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் 9,39,783 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டில் 9,12,864 குழந்தைகளும், 2022 ஆம் ஆண்டில் 9,36,367 குழந்தைகளும், 2023 ஆம் ஆண்டில் 9,02,306 குழந்தைகளும் பிறந்துள்ளனர். ஆனால் 2024 ஆம் ஆண்டில் 8,41,821 குழந்தைகள் மட்டும்தான் பிறந்துள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் குழந்தைகள் பிறப்பு தமிழகத்தில் மிகவும் சரிவை சந்தித்துள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது