தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் அதிகாலை நேரத்தில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இன்று காலை கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் உறை பனி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகிற 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானமேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.