தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைநிலைநாட்டுவதில் காவல்துறையும் அரசின் அனைத்து துறை செயலாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு அரசு நல்ல அரசாக செயல்படுவதற்கு சட்டம் மற்றும் ஒழுகு முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் இன்று அமைதி பூங்காவாக திகழ்வதற்கு முக்கிய காரணம் சட்ட மற்றும் ஒழுங்குக்கு கொடுத்து வரும் முக்கியத்துவம் மட்டும்தான்.

சட்டம் ஒழுங்கை முறையாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதன் அடையாளம் தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள். எனவே நிம்மதியும் அமைதியும் இருக்கும் மாநிலத்தில் தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும். ஜாதி மற்றும் மதம் ரீதியான மோதல்களை தடுப்பது ஒருபுறம் என்றால் அவற்றை சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்புவோர் அதிகமாகி வருகிறார்கள். அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.