
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்குவதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் பாதிப்புக்கு சுய மருத்துவம் பார்க்க வேண்டாம் எனவும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.