
தமிழ்நாட்டில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பாஜகவின் இந்த தோல்விக்குபாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இப்போதே பாஜகவுக்குள் குரல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் டெல்லி தலைமையும் பாஜக தலைவர் அண்ணாமலை தான் அதிமுகவை கூட்டணிக்குள் வர விடாமல் தடுத்தார் என்றும் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணங்களால் தேர்தல் முடிந்ததும் அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.