
நாடு முழுவதும் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தற்போது 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒன்னாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின்படி பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்வி செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும்.
தற்போது அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தங்களின் குழந்தைகளை சேர்க்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு இருக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் சேர்க்க விரும்பும் பள்ளி நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். தற்போது ஒன்றாம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில் ஒருவர் சுமார் ஐந்து பள்ளிகளை தேர்ந்தெடுத்த விண்ணப்பிக்கலாம். 25 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குழுக்கள் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.