
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தற்போது வி.சாலையில் தொடங்கிவிட்ட நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதலில் கொடியேற்றிய நடிகர் விஜய் அதன்பின் கட்சியின் உறுதிமொழிகளை ஏற்றதோடு கட்சி கொள்கை பாடல்களை வெளியிட்டனர். அதன் பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து கூறியுள்ளனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை மதுரையில் அமைக்கப்படும் என்று கூறினர். அதன் பிறகு தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கைதான் கட்சி கொள்கை என்று அறிவித்து விட்டனர். அதன்பிறகு வர்ணாசிரம வழக்கங்களுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற நிலை உறுதி செய்யப்படும். ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். தீண்டாமையை கடைப்பிடித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும். மேலும் லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.