தமிழகத்தில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது ஏற்றுமதி, உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்கிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் தேங்காய் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 100 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. மேலும் இது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.