தமிழகத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டது. அதில் 293 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில் இவர்களுக்கான பணி காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக ஆலோசித்து இந்த ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளி கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதனை ஏற்று 293 ஆசிரியர்களுக்கும் டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பானை அளிக்கப்படுகிறது. எனவே சார்ந்த அலுவலர்கள் சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அதனை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.