தமிழகத்தில் தாராபுரம்  மூலனூர் வட்டாரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ. 54 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த றிக்கையில், சொட்டு நீர்ப்பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் போன்ற அமைப்புகள் மூலம் பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. எனவே  சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.