தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வெயில் காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தான் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்ளேட்டா அனைத்து பள்ளி வேலை நாட்களில் விவரங்களை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 14 முதல் 27ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 11 முதல் 22 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை எனவும் தெரிவித்துள்ளது. பின்னர் மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் மே 1 முதல் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது