தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூலை இரண்டாம் தேதி நீலகிரி, கோவை, கடலூர், விரும்புற மற்றும் காஞ்சி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை மூன்றாம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் எனவும்சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.