
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதலில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஓரிரு நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆகஸ்டு 12ஆம் தேதி 17 மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி 11 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று தகவல் தெரிவித்துள்ளது.