
தமிழகத்தில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காலிப்பணியிட விவரங்களை செப்டம்பர் 5க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.