
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனைப் போலவே இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.