
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருந்தாலும் இந்த மாதம் இறுதியில் சூழ்நிலையை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகே பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.