தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி திறப்புக்கான பணிகளை அரசு தீவிர்படுத்தி உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்படும் என்றும், பள்ளி தொடக்க நாளான ஜூன் 6ஆம் தேதி அனைத்து வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.