
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க உள்ளன. மாணவர்கள் புதிய பேருந்து பயண அட்டைகள் கிடைக்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.