தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் உள்ள விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.

14 வயது குட்பட்ட மற்றும் 14 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு சதுரங்கம், உடல் திறன் தேர்வு, தடகளம், குத்து சண்டை, ஜிம்னாஸ்டிக், வளைய பந்து, வால் சண்டை, ஜூடோ, நீச்சல், சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் செப்டம்பர் முதல் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுவதற்கான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.