தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 1.4 வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.