பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக அவசியத்திற்காக செயல்படுகிறது. அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய பொருந்தாத கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால் பாஜக மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளது.

குளத்தில் உள்ள வட்ட இலையோடு தாமரை மலரும். தமிழ்நாட்டில் இரட்டை இலையோடு தாமரை மலரும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே தான் போட்டி என்று விஜய் கூறும் நிலையில் இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு வேண்டுமானால் போட்டி நிலவலாம். விஜய் வேண்டுமானால் இரண்டாம் இடத்திற்கு வரலாம்.

ஏனெனில் நாங்கள் முதல் இடத்திற்கு வருவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்றார். முன்னதாக நடிகர் விஜய் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டி என்று கூறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே இரண்டாம் இடத்திற்கு போட்டி நிலவுகிறது என்றார்.

இதேபோன்று திருமாவளவன் உள்ளிட்டோரும் இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி நிலவுகிறது என்றனர். மேலும் இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் வேண்டுமானால் இரண்டாம் இடத்திற்கு வரலாம் என்று கூறியது பேசும் பொருளாக மாறியுள்ளது.