பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது. கணித பாடத்திற்கான கேள்வித்தாளில் 47(b)கேள்வி முழுமை பெறாமல் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில் அந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணாக 5 மார்க் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.