தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 9 சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 17,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் திருமுடிவாக்கம், மதுரை கருத்தம்புளியம் பட்டி, விழுப்புரம்-சாரம், கரூர்-நாகம்பள்ளி, தஞ்சை நடுவூர், திருச்சி சூரியூர், நெல்லை நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் தனுச்சியம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.