
தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் திருச்சியில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு விடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தற்போது விரைவில் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ரூ.43.41 கோடி செலவில் புதிய தொழிற்சாலை கட்டப்பட இருக்கிறது.
இந்த தொழிற்சாலையில் ஐஸ் கிரீம் மட்டுமின்றி, தயிர் போன்றவைகளும் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இங்கு புதிய தொழிற்சாலை வந்தால் டெல்டா மாவட்டங்களுக்கும் இங்கிருந்து விநியோகம் செய்யப்படும். மேலும் இந்த தகவல் திருச்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய தொழிற்சாலையானது திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள கொட்டப்பட்டி பகுதியில் அமைய இருக்கிறது.