தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது இடங்களில் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் விற்பனை மற்றும் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி சட்டப்படி தண்டனை வாங்கி தர வேண்டும். சொத்து தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஜாதி மற்றும் மதம் உள்ளிட்ட கருத்துக்களை பரப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.