
சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
திமுகவின் திராவிட மடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 5 ஆயிரத்து 800 மதுபான பார்களின் 4000 பார்களுக்கு அனுமதி கிடையாது.தமிழகத்தில் அனுமதி இல்லாத மதுபான பார்கள் மூலம் 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்பது இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.