தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பேருந்துக் கட்டணம் உயா்வு என்று தகவல்கள் வெளியாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டணம் உயர்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.