
உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் கோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் மீண்டும் தடையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.