
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 1.16 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் நாளை வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்றே பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் தொகை வரவு வைக்கப்படுவது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.