
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் மீண்டும் இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான காரணங்கள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணங்கள் அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.