தமிழகத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்திற்கான கட்டணம் சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில் தொழில் நிறுவனங்கள் சமீப காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஜவுளி உற்பத்தி ஊழியர்கள் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின்கட்டணத்தை அரசு குறைத்துள்ளது. அதன்படி பீக் ஹவர் நேரத்திற்கான மின்கட்டணம் மின் பயன்பாட்டை பொறுத்து 10 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது