பொதுவாகவே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம்b நிகழ்கின்றன. சாதாரணமாக செல்போனுக்கு சார்ஜர் போடும்போது கூட மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழக்கும் அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. இது போன்ற சூழலை தடுக்க வீடுகளில் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் விபத்துக்களை தவிர்க்கலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வீடுகளில் பழுதான சுவிட்சுக்களாலும், ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்கும்போதும் மின் கசிவை ஏற்படலாம். மின் கசிவு தடுப்பு கருவியை வீடுகளில் பொருத்துவதன் மூலமாக மின் விபத்துக்களை தடுக்கலாம். இந்த கருவி ஆயிரத்து 500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது பற்றி கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம்.