
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. சமீபத்தில் கோவையில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது ஒரு கல்லூரி மாணவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் உள்ள வீர கேளம்புதூர் பகுதியில் கல்லூரி மாணவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அது தொடர்பாக பெற்றோர் புகார் கொடுக்கவில்லை. ஆனால் குழந்தைகள் நல அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த சம்பவம் குறித்து தெரிந்ததால் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.