புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய செங்கீரை பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை ஏற்கனவே பிறந்து இறந்த நிலையில் அவருடைய கணவர் அலோபதி முறை மீது நம்பிக்கையை இழந்துள்ளார்.

இதன் காரணமாக தன்னுடைய மனைவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததை சுகாதாரத் துறையிடம் மறைத்த அவர் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதில் குழந்தை இறந்தே பிறந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முன்னதாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பார்த்து சென்னையில் மனோகரன் என்பவர்  தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்அவர்  கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.