
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு உள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வெளியாக இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் மரணம் அடைந்துள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பாக சிபிஐ கட்சியின் செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், பாஜக சார்பில் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா ஆகியோர் களம் கண்டனர். இந்த முறையும் எம்பி செல்வராஜ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின. எனினும் அவர் தோல்வி அடைந்தால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். அதனைப் போலவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேதி அறிவிக்கப்படாத நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.