திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அண்ணன் தம்பி இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணன், தம்பி இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.