நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை பள்ளிகள் திறப்பதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பள்ளி திறப்பதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூடிய விரைவில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.