தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.‌ இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டத்தினால் ஏராளமான மாணவ மாணவிகள் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக மாநில திட்ட குழு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, முதல்வரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது.

அதன்பிறகு குழந்தைகளின் கற்றல் ஆர்வம், வகுப்பறையில் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூறும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் வாசித்தல், பேசும் திறன் மற்றும் கையெழுத்து திறன் போன்றவைகள் அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சீரிய திட்டங்கள் குறித்து மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கைகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.