
தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன் வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்தம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது சட்டத்திருத்தம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.