
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார்.
இதுகுறித்த நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு ரயில்வே பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 6362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்டத்தை விட ஏழு மடங்கு அதிகமாகும். மேலும் தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த சுமார் 2000 ஏக்கர்கள் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதால் தான் பணிகள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.