தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் நிலையிலும் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்க தான் செய்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவாகிறது. அதன்படி மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்பிறகு ஈரோடு மாவட்டத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், தூத்துக்குடியில் 101 டிகிரியும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 101 டிகிரியும், திருநெல்வேலியில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் பல இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகிற 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.