
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்பிறகு நேற்று மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் விநாயகர் சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கும் சிலைகளை மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்தி ஒன்று பரவியது. இதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டண வசூலிக்க படாது. மேலும் இது தொடர்பாக பரவிய செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.