தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளின் மூலமாக தினசரி ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது என்றும் இதற்காக 1,658.31 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 4.53 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் 195 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.