
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது விற்பனை செய்யப்படுவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கணபதி குடியிருப்பில் 163 அடுக்குமாடி குடியிருப்புகளும், சிங்காநல்லூர் பகுதியில் 30 அடுக்குமாடி குடியிருப்புகளும், உப்பிலிபாளையத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகளும், பொன்னையா ராஜபுரத்தில் 23 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரூ.26 லட்சம் முதல் வீட்டின் விலை தொடங்குகிறது. இதனை வாங்க விருப்பம் உள்ளவர்கள் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியத்தை நேரடியாக அணுகலாம். மேலும் ஆன்லைனில் https://tnhb.tn.gov.in/என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.