
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி லயோலோ கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அந்தக் கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி 43 முதல் 49 சதவீத வாக்குகள் பெறும் என்றும், பாஜக கூட்டணி 19.5 முதல் 24 சதவீதம் வரை வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அதிமுக கூட்டணி 16 முதல் 20 சதவீதம், நாம் தமிழர் கட்சி 6.8 முதல் 12 சதவீதமும், பிற கட்சிகள் 2.5 முதல் நான்கு சதவீத வாக்குகள் பெரும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன