பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய பட்ஜெட் என்பது சாமானிய மக்களுக்கான பட்ஜெட். இதை பொது மக்களுக்கு தெளிவாக எடுத்து கூறும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. பட்ஜெட்டில் 12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பிறகு தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று செந்தில் பாலாஜி கூறுகிறார்.

ஆனால் பொது மக்களிடையே கவலை மட்டும் தான் வீசுகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பணி செய்யும் இடங்கள் சாலைகள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது என்று கூறினார்.