
தமிழ்நாடு முழுவதும்தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் 7, 8, 9 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1222 இடங்களில் சாதனை விளக்க பொது கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனையை எடுத்துரைக்கும் விதமாக கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற இருக்கிறது. உதயநிதி சென்னை சேப்பாக்கத்திலும், கனிமொழி தூத்துக்குடியிலும், துறைமுருகன் நாகர்கோவிலும், கே என் நேரு சேலத்திலும் பேசுகின்றனர்.