
தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழகத்தில் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மழை பெய்யும் சமயத்தில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.